நெருங்கோப்புகள்
Zipfile |
| கணினியைப் பயன்படுத்துபவர்களில் நெருங்கோப்புகளைப்(zip files) பற்றி அறியாதார் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் பயன் விரிந்துபட்டது. இணையத்தில் இடவசதிகளின்பொருட்டும், இறக்கிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவினை குறைப்பதின் பொருட்டும் இறக்கிக்கொள்ளத்தக்க கோப்புகளை நெருங்கோப்புகளாகவே அமைப்பது வழக்கம். நமது கணினியிலும் நெடுநாள்கள் வைத்திருக்கவேண்டிய தொகுக்கப்பட்ட கோப்புகளை நெருங்கோப்புகளாக மாற்றி சேமித்துவந்தால் இவை வண்தட்டில் அதிக இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்கமுடியும். நெருங்கோப்புகளை அமைப்பதற்கு பல நிறுவனங்கள் செயலிகளை எழுதி விற்பனை செய்துவருகின்றன. இவற்றில் பல, வலைத்தளங்களில் இலவசமாக இறக்கிக்கொள்ள கிடைக்கின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வின்சிப் (winzip) என்னும் செயலி இவற்றில் மிகவும் புகழ்பெற்றது. நம்மில் பலர் நெருங்கோப்புகளை விரிப்பது பற்றி அறிந்திருந்தாலும், அதன் மூலம் கேப்புகளைச் நெருக்குவது பற்றி அறிந்திலர் சிலர் இவைபற்றியும் அறிந்திருந்தும், பெரிய கோப்புகளை நெருக்கி ஒன்றுக்கு மேற்பட்ட நெகிழ்தட்டுகளில் சோந்ந்து பற்றி அறிந்திலர். இவைபற்றி நாம் படிப்படியாக இக்கட்டுரையில் காண்போம்.
|
tamil4u எழுதியவை | செப்டம்பர் 22, 2009
நெருங்கோப்பு
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது
நெருங்கோப்புகள்
அண்மைய மறுமொழிகள்