
கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கூகிள் குரோம் ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும். பெப்ரவரி 2009 இன் படி பாவிக்கப்படும் உலாவிகளில் 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.வெப்கிட் இன் பாகங்களையும் மொசில்லா பயர்பாக்ஸ் வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் விண்டோஸ்வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது 2008 இல் வெளிவந்தது. குரோம் என்ற பெயரானது உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம் இன்னமும் தமிழ் 8 இந்திய மொழிகளுக்கான பதிப்பு விருத்தியில் உள்ளது. தற்பொழுது உலகின் 43 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
Google Chrome: Windows க்கான ஒரு புதிய வலை உலாவி
// வலைத்தளத்தை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக தருவதற்கு, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சிறிய வடிவமைப்பைக் கொண்ட ஒரு உலாவியே Google Chrome ஆகும்
அம்சங்கள்
Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும். நாங்கள் உலாவியை கட்டமைத்தற்கான காரணத்தைப் பற்றி படியுங்கள்.
-

அனைத்திற்கும் ஒரே பெட்டி
முழுமையான ஒரே பெட்டி, உங்கள் உலாவல் தேவைகளான வலைத் தேடல், வலை வரலாறு, முகவரிப் பட்டி, தட்டச்சு செய்யும்போது வரும் பரிந்துரைகள் போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. மேலும் அறிக .
-

புதிய தாவல் பக்கம்
புதிய தாவலைத் திறக்கும் ஒவ்வொரு முறையும், அதிகம் பார்வையிட்ட தளங்கள், அதிகம் பயன்படுத்திய தேடுபொறிகள் மற்றும் சமீபத்தில் புக்மார்க் செய்யப்பட்ட பக்கங்கள் மற்றும் மூடிய தாவல்கள் ஆகியவற்றின் காட்சி மாதிரிகளைக் காண்பீர்கள். மேலும் அறிக.
-

பயன்பாட்டு குறுக்குவழிகள்
உலாவியைத் திறக்காமலே வலை பயன்பாடுகளைப் பயன்படுத்துங்கள். பயன்பாட்டு குறுக்குவழிகள், உங்களுக்குப் பிடித்த ஆன்லைன் பயன்பாடுகளை நேரடியாக நினைவேற்றும். மேலும் அறிக.
-

டைனமிக் தாவல்கள்
உலாவியிலிருந்து தாவல்களை வெளியே இழுத்து புதிய சாளரங்களை உருவாக்கலாம், பல சாளரங்களை ஒரே சாளரமாக்கலாம் அல்லது விரும்பும் வகையில் ஒழுங்கமைக்கலாம் – இதனை விரைவாகவும் எளிதாகவும் செய்ய முடியும். மேலும் அறிக.
-

செயலிழப்புக் கட்டுப்பாடு
நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தாவலும், உலாவியில் தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன, ஆகவே ஒரு பயன்பாடு செயலிழந்தால் அது மற்ற பயன்பாடுகளை பாதிக்காது. மேலும் அறிக.
-

மறைநிலை பயன்முறை
நீங்கள் பார்வையிட்ட பக்கங்கள், வலை வரலாற்றில் காண்பிக்கப்பட வேண்டாமா? தனிப்பட்ட உலாவலுக்கு மறைநிலை பயன்முறையைத் தேர்வுசெய்க. மேலும் அறிக.
-

பாதுகாப்பான உலாவல்
ஃபிஷிங், தீம்பொருள் என்று சந்தேகிக்கப்படும் அல்லது பாதுகாப்பற்ற பிற வலைத்தளங்களைப் பார்வையிட செல்லும்போது Google Chrome உங்களை எச்சரிக்கும். மேலும் அறிக.
-

உடனடி புக்மார்க்ஸ்
ஒரு வலைப்பக்கத்தை புக்மார்க் செய்ய வேண்டுமா? முகவரிப்பட்டியின் இடது ஓரத்தில் உள்ள நட்சத்திர ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் இதை செய்துவிடலாம். மேலும் அறிக.
-

அமைப்புகளை இறக்குமதி செய்தல்
Google Chrome க்கு மாறும்போது, நீங்கள் முன்பு பயன்படுத்திய உலாவியிலிருந்து நீங்கள் பயன்படுத்தி வந்த புக்மார்க்ஸ், கடவுச்சொற்கள் போன்ற அனைத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் அறிக.
-

எளிமையான பதிவிறக்கங்கள்
தேவையில்லாமல் குறுக்கிடும் பதிவிறக்க நிர்வாகி இல்லை; பதிவிறக்கத்தின் நிலையை நடப்பு சாளரத்தின் கீழ்ப்பகுதியில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் அறிக.
உலாவி ஒரு புதிய பரிமாணம்
Google இல் பெரும்பாலான நேரம் உலாவியிலேயே நாங்கள் செலவிடுகிறோம். தேடுவது, அரட்டையடிப்பது, மின்னஞ்சலனுப்புவது மற்றும் ஒருங்கிணைவது ஆகிய அனைத்தையும் ஓர் உலாவியில் செய்கிறோம். உங்கள் எல்லோரையும் போலவே, எங்கள் ஓய்வு நேரத்தில் ஷாப்பிங், வங்கிப் பணிகள், செய்திகள் படிப்பது மற்றும் நண்பர்களிடம் பேசுவது போன்றவற்றைச் செய்கிறோம் – இவை அனைத்தும் ஓர் உலாவியைப் பயன்படுத்தியே செய்கிறோம். மக்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மேலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வலை உருவான போது கற்பனை செய்தும் பார்க்காத விஷயங்களை இப்போது செய்கிறார்கள்.
நாங்கள் ஆன்லைனிலேயே பெரும்பாலான நேரம் செலவிடுவதால், நீங்கள் அடிப்படையிலிருந்து தொடங்குபவரானால் உங்களுக்கு எவ்வகையான உலாவி சிறந்ததாக இருக்கும் என்பதைப் பற்றித் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினோம், அதன் விளைவாக சிறந்த அம்சங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளோம். வலை என்பது முதன்மையாக எளிய உரைப் பக்கங்களிலிருந்து இப்போது மேம்பட்ட, ஊடாடக்கூடிய பயன்பாடுகள் வரை வளர்ந்துள்ளதை நாங்கள் அறிவோம். ஆகவே உலாவியைப் பற்றி மீண்டும் நாங்கள் முழுமையாக சிந்திக்க வேண்டி வந்தது. உண்மையில் நமக்குத் தேவையானது வெறும் உலாவி மட்டுமல்ல, வலைப் பக்கங்களுக்கும் பயன்பாடுகளுக்குமான நவீன ப்ளாட்ஃபார்ம் ஆகும். இதனாலேயே நாங்கள் மீண்டும் உருவாக்கும் படி ஆயிற்று.
ஆகவே, இன்று நாங்கள் புதிய ஓப்பன் சோர்ஸ் உலாவியின் பீட்டா பதிப்பை வெளியிடுகிறோம்: Google Chrome.
மேல் தோற்றத்தைப் பொறுத்தவரை, ஓர் ஒழுங்கான எளிய உலாவி சாளரத்தை வடிவமைத்துள்ளோம். பெரும்பாலான மக்களுக்கு உலாவி முக்கியமில்லை. அவர்களுக்கு அது, வலையில் முக்கியமானவையான பக்கங்கள், தளங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை இயக்குவதற்கான ஒரு கருவி மட்டுமே. கிளாஸிக் Google முகப்புப் பக்கம் போலவே, Google Chrome நேர்த்தியானதும் வேகமானதுமாகும். அது உங்களுக்காக உங்களுக்குத் தேவையானதைக் கொண்டுவந்து சேர்க்கும்.
தோற்றத்தில் எளிதாகத் தோன்றினாலும் பின்புலத்தில், இன்றைய சிக்கலான வலைப் பயன்பாடுகள் மேலும் சிறப்பாக இயங்கக்கூடிய ஒரு உலாவியின் அடிப்படையைக் கட்டமைக்க முடிந்தது. ஒவ்வொரு தாவலையும் தனிப்பட்ட “சாண்ட்பாக்ஸில்” வைப்பதன் மூலம், ஒரு தாவல் மற்றொரு தாவலைப் பாதிப்பதைத் தடுக்கவும் ஆபத்தான தளங்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்தவும் முடிந்தது. அனைத்து வகையிலும் வேகத்தையும் பதிலளிக்கும் திறனையும் அதிகரித்தோம். இன்றைய உலாவிகளிலும் இயங்க முடியாத அடுத்த தலைமுறை வலைப் பயன்பாடுகளையும் ஆதரிக்கும் ஆற்றலுள்ள V8 என்ற JavaScript இஞ்சினையும் உருவாக்கினோம்.
இது தொடக்கம் தான் – Google Chrome தயாரிப்பு முழுமையாக முடிய இன்னும் காலம் உள்ளது. பரந்த அளவிலான விவாதங்களைத் தொடங்கவும், கூடுமான விரைவில் உங்கள் கருத்துக்களைப் பெறவுமே Windows க்கான இந்த பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளோம். Mac மற்றும் Linux இயக்க முறைமைகளுக்கான பதிப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தீவிரமாகப் பணிபுரிகிறோம். தொடர்ந்து கூடுதல் வேகம் மற்றும் வலிமை மிக்கதாக இதை மேம்படுத்தவும் பணிபுரிவோம்.
பல ஓப்பன் சோர்ஸ் திட்டப்பணிகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம், மேலும் தொடர்ந்து அவர்களுடன் ஒருங்கே பணிபுரிய முடிவு செய்துள்ளோம். Apple’s WebKit மற்றும் Mozilla’s Firefox போன்றவற்றின் கூறுகளையும் பயன்படுத்தியுள்ளோம் – ஆகவே எங்கள் குறியீடுகள் அனைத்தையும் ஓப்பன் சோர்ஸாகவே வைத்திருக்கிறோம். வலை என்னும் அம்சத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல, எல்லா சமூகத்துடனும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என விரும்புகிறோம்.
கூடுதல் வசதிகள் மற்றும் கண்டுபிடிப்புகளால் வலை மேலும் சிறந்ததாகும். Google Chrome என்பது மற்றொரு வழியாகும். வலையை மேலும் மேம்படுத்த இது தனது சிறப்பான பங்களை அளிக்கும் என நம்புகிறோம்.
நாங்கள் கூறியது போதும்! நீங்களே Google Chrome ஐ முயற்சித்துப் பார்த்து அறிவதே சிறந்தது.

அண்மைய மறுமொழிகள்